டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதில் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகாவுடன் சேர்ந்து கொண்டாடிய விதம் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வெற்றி விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த பிரசன்டேஷன் மேடையிலேயே ஹர்திக் தனது காதலியுடன் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவின் இந்தச் செயல் எல்லையை மீறிவிட்டதாகக் கூறி அவரைக் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
I have never seen Bigger Cringe attention seekers than Hardik Pandya and Mahieka
Other players also celebrate with their Wives or Girlfriends on the field, but no one behaves like this
— Veena Jain (@Vtxt21) March 9, 2026
”மற்ற வீரர்களும் தங்கள் மனைவி மற்றும் காதலிகளுடன் கொண்டாடினர், ஆனால் யாரும் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்ளவில்லை” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். “அடுத்த உலகக்கோப்பை வரும்போது ஹர்திக் வேறொரு புதுப் பெண்ணுடன் இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சிலர் கிண்டல் செய்துள்ளனர். கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் குடும்பத்தினர் நுழைவதற்கு பிசிசிஐ தடை விதிக்க வேண்டும் என்றும், ஹர்திக்கின் இந்த அநாகரீகச் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
