“டியூட்” திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் பெரும் ரசிகர் திரள் குவிந்து வருவதோடு, படம் தற்போது 95 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் பெருமிதத்துடன், “இது ஒரு சாம்பிள் தான் — படம் 100 கோடியை நிச்சயமாக கடக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வெற்றியே படம் எவ்வளவு மக்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதற்கான சான்று” என கூறி, ரசிகர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

“>

அதே நேரத்தில், தனது படத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கும் அவர் பதிலளித்தார். “நான் கூறிய கருத்துக்கள் தமிழ்நாட்டிற்கு புதியவை அல்ல. இதேபோன்ற கருத்துகளை பெரியார் அவர்கள் முன்பே கூறியுள்ளார். எனவே இது தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுக்கு எதிரானது அல்ல, அதன் ஓர் தொடர்ச்சியே” என அவர் தெரிவித்தார்.

மேலும், “இத்தகைய சமூக சிந்தனைகளை என் எதிர்கால படங்களிலும் சொல்லத் தவற மாட்டேன்” என உறுதியாக கூறிய அவர், தனது உரை இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.