
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், பெண்கள் குழுவொன்று மக்கள் மத்தியில் நின்று தங்கள் அவர்களின் சட்டைகளில் கொடிகளை ஒட்டி, அதற்காக பணம் வசூலிக்கிறார்கள். இந்த காட்சி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தை தனது கேமராவில் பதிவு செய்து சமூக ஊடக தளமான ‘X’ மற்றும் ‘Instagram’ பக்கத்தில் @gharkekalesh என்ற கணக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “மெட்ரோ மோசடி எப்படி நடக்கிறது என்பதை உங்களுக்கு நேரில் காண்பிக்கிறேன். இவர்கள் எந்தவொரு அரசுத் துறையுடன் சம்பந்தம் இல்லாத நிலையில், தங்களது மார்பில் ஒரு கொடியை ஒட்டி வைத்து, அதை நம்பி மக்கள் பணம் தருகிறார்கள்” எனக் கூறும் குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் லைக்குகள் அளித்து, லட்சக்கணக்கானோர் பார்க்க தொடங்கி விட்டனர். ஏராளமான நெட்டிசன்கள் “இது நம்ம நாட்டின் வேதனை”, “மோசடி வழியிலே பணம் சம்பாதிக்க நினைக்கும் மனநிலை வேதனைக்குரியது” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பெண்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வசூலிக்கும் பணம் எங்கு செல்கிறது, அது சட்டப்பூர்வமானதா என்பதனை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. மேலும் நாள்தோறும் பரவும் இத்தகைய மோசடி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கிய எச்சரிக்கையாக நிலவுகிறது.
Delhi Metro Scam
pic.twitter.com/w3GRbxwyF4— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 8, 2025