விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்” என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒட்டுமொத்தத் தமிழகமே தனது இல்லம் என்றும், இங்குள்ள மக்கள் அனைவரும் தனது சொந்தங்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சேலத்தில்  நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியல் களத்தில் தம்மீது வீசப்படும் கேலிப் பேச்சுகளை ஆக்கபூர்வமான சக்தியாக  மாற்றியிருப்பதாகத் தெரிவித்தார். தங்களுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், தவெக-வின் வளர்ச்சிக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், தடைகளைத் தகர்த்து மக்கள் பணியைத் தொடரப் போவதாகவும் ஆவேசமாக முழங்கினார்.

தமிழ்நாடு தான் என்னுடைய வீடு. என்னுடைய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். விஜய் வீட்டை விட்டு வெளியே வா பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்க இருக்கு என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு நான் சொல்கிறேன் என் தாய் நாடான தமிழ்நாடு தான் என்னுடைய வீடு. நம்ம ஏளனமாக பார்க்கும்போது நம்மை தாழ்வாக பார்க்கும்போது நாம் நிரூபிக்க வேண்டும் என்று ஒரு புள்ளி தோன்றும். எந்த நேரத்தில் நம்மை கேலியும் கிண்டலும் செய்கிறார்களோ அங்கிருந்துதான் நம்முடைய பவர் ஸ்டார்ட் ஆகிறது.நீதி கேட்டு வந்திருக்கேன் உங்க கிட்ட ஓட்டு மட்டும் கேட்கவில்லை; நீதிக்கேட்டு வந்திருக்கிறேன் தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான் இந்த விஜய், அது ஒரு தப்பா? நான் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக விட்டுட்டு வந்தேன்; அது ஒரு தப்பா? என்று கூறினார்.