ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரிட்டன் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும், மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் அமெரிக்கா மற்ற நாடுகளின் உதவியைக் கோரியிருந்தது.
ஆனால், இந்தப் போரில் பிரிட்டன் பங்கேற்காது என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “இது எங்கள் போர் அல்ல” என்று கூறிய அவர், இந்தப் பிரச்சனையில் தலையிடப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேசமயம், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாக்கவும் 35 நாடுகளை ஒன்றிணைத்து பிரிட்டன் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இராணுவத் திட்டமிடுபவர்களுடன் ஆலோசித்து, ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து இந்தப் நாடுகள் விரைவில் விவாதிக்க உள்ளன.
அமெரிக்காவின் போர் அழைப்பை நிராகரித்துள்ள பிரிட்டன், அமைதி மற்றும் பாதுகாப்பான வர்த்தகப் பாதையை உருவாக்குவதிலேயே தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
