ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் ருத்ரதாண்டவம் ஆடினார்.

வெறும் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்த அவர், தனது அதிரடியான அரை சதத்தை பூர்த்தி செய்ததும் மைதானத்தில் ஒரு சிறிய காகிதத்தைக் காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த காகிதத்தில் “இது உங்களுக்காக அப்பா” (This is for you Papa) என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. தனது சிறப்பான ஆட்டத்தை மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணித்த உர்வில் படேலின் இந்த நெகிழ்ச்சியான செயல், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அவரது இந்த மிரட்டலான பேட்டிங் மற்றும் தந்தை மீதான பாசம் கலந்த இந்த தருணம் கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.