உலக நாடுகள் பலவற்றில் தற்போது யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. சிறிய கடைகளிலிருந்து பெரிய மால் வரை எங்கு போனாலும் யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவும் பெறவும் செய்யலாம். இந்நிலையில் இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆகிய இரண்டு நாடுகளும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.

அதன்படி இலங்கை மற்றும் மொரிசியஸில் இன்று நடக்கும் விழாவில் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. காணொளி காட்சி மூலமாக நடக்க இருக்கும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மொரிஷியஸ் பிரதமர் ஜக்நாத் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.