இலங்கையில் கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் விமான நிலையங்களின் சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள மூன்று பிரதான விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலாண்மை பணிகளையும் அந்நிறுவனத்திடம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.