முன்பெல்லாம் திருமணம் செய்ய பொருத்தமான இணையை பார்ப்பதற்கு திருமண தரகர்களை பயன்படுத்தி வந்தோம். பின்னர் மேட்ரிமோனி மூலம் தங்களுக்கு பொருத்தமான இணையை தாங்களே தேடி வந்தனர். இந்நிலையில் மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக AI தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது.

ரஸ்யாவை சேர்ந்த 23 வயதான ரஷ்யாவைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன் டின்டர் செயலில் தனக்கு பொருத்தமான இணையை கண்டுபிடிக்க சாட்ஜிபிடி-யை (ChatGPT ) பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு வருட முயற்சிக்கு பிறகு கரீனா என்ற பெண்ணை தனக்கு பொருத்தமானவர் என அது கண்டுபிடித்து கொடுத்ததாக கூறியுள்ளார்.