இந்தியத் திரையரங்குகளின் அனுபவம், குறிப்பாக இங்குள்ள இடைவேளை  முறை, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘ஒன்னி பிரதர்ஸ்’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் தனது இந்தியத் திரையரங்கு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பொதுவாகத் தென்கொரியாவில் எவ்வளவு நீண்ட திரைப்படமாக இருந்தாலும் இடைவேளை கிடையாது, இதனால் இந்தியத் திரையரங்குகளில் திடீரென விளக்குகள் எரிந்தபோது, ஏதோ அவசரநிலை என்று நினைத்து அவர் முதலில் அச்சமடைந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jung ae Um🇰🇷 living in India🇮🇳 (@wonny_brothers)

ஆனால், அந்த இடைவேளை நேரத்தைப் பயன்படுத்தி சிற்றுண்டிகள் வாங்குவதையும், புத்துணர்ச்சி பெறுவதையும் கவனித்த அவர், இந்த முறை தனக்குப் பெரும் பிடித்துப்போனதாகத் தெரிவித்துள்ளார்.

தியேட்டர் நுழைவாயில் முதல் பாப்கார்ன் கவுண்டர் வரையிலான அனைத்தையும் மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் வடிவமைத்துள்ள இந்தியத் திரையரங்குகள், சர்வதேசத் தரத்திற்கு இணையாக இருப்பதாக அவர் மனதாரப் பாராட்டியுள்ளார்.

மேலும், ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ திரைப்படம் இந்தியாவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ளது குறித்த விவாதங்கள் உலகளவில் நடந்து வரும் சூழலில், இந்தியாவின் இந்தத் திரையரங்கு கலாச்சாரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.