அரபிக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்த MV Gautam என்ற இந்தியக் கப்பல், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றது.
நிலையை உணர்ந்த இந்திய அதிகாரிகள் உடனடியாக உதவி கோரி பாகிஸ்தான் தரப்பிற்குத் தகவல் தெரிவித்தனர். அந்த அழைப்பை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பாகிஸ்தான் கடற்படையினர், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றனர்.
அங்குத் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த மாலுமிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி அவர்கள் உயிரைக் காத்தனர்.
எல்லைப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு கடலில் காட்டப்பட்ட இந்த மனிதாபிமான உதவி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
