திருமணம் என்றாலே கொண்டாட்டம், கேலி கிண்டல் இருக்கும் நிலையில், ஒரு திருமண விழாவில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நுரை விருந்து (Foam Party) நடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமண மண்டபத்தில் ஒரு பெரிய நுரை உருவாக்கும் கருவி (Foam Generator) வைக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து கொட்டும் வெள்ளை நுரையில் நனைந்தபடி, மணமக்களும் உறவினர்களும் உற்சாகமாக நடனமாடுகின்றனர். பார்ப்பதற்கு நுரை சூழ்ந்த மேகம் போன்ற சூழலில், அனைவரும் நுரையில் முழுவதுமாக நனைந்திருந்தாலும், அதை ஒரு வேடிக்கையாக எண்ணி ஒருவருக்கொருவர் நுரையைப் பூசி மகிழ்வது அந்தக் காணொலியில் காணப்படுகிறது.
<a href=”http://

“>
இந்த வித்தியாசமான கொண்டாட்டத்தைக் கண்ட இணையவாசிகள், “யாரோ ஒரு வாஷிங் மெஷினை கவிழ்த்து விட்டது போல இருக்கிறது”, “இன்று நுரையில் குளித்தார்கள்” என்று வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.