நடிகர் மன்சூர் அலிகானுடன் அதிமுக நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையை அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எல்லா கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிமுகவை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டீர்களே? இபிஎஸ் கூறிய மெகா கூட்டணி இதுதானா? உங்களை எல்லாம் அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.