தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மகளிர் தின விழாவில் முன்வைத்த ஊழல் எதிர்ப்பு முழக்கங்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

“அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களுக்குப் பணம் இல்லை எனக் கூறும் ஆட்சியாளர்கள், தேர்தல் நெருங்கும் போது மட்டும் எப்படிப் பணத்தை விநியோகிக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பிய விஜய், இதற்குப் பின்னணியில் இருக்கும் நிதியியல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 4.39 லட்சம் கோடி ரூபாய் எனக் குறிப்பிட்ட அவர், அதில் 30 சதவீதத் தொகை ஊழல் மூலமாகவே கைமாறுகிறது என்ற அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த 30 சதவீதத்தில் 20 சதவீதம் முதல்வர் ஸ்டாலினுக்கும், 10 சதவீதம் அவரது அமைச்சரவைக்கும் செல்வதாக அவர் குறிப்பிட்ட ‘ஸ்டாலின் சார் டேக்ஸ்’ (Stalin Sir Tax) என்ற சொல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

மக்களுக்காக ஒதுக்கப்படும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யாமல், நேர்மையான முறையில் நிர்வாகம் நடத்தப்பட்டால், தான் அறிவித்துள்ள அனைத்து அதிரடித் திட்டங்களையும் மிக எளிதாகச் செயல்படுத்த முடியும் என விஜய் உறுதிப்படத் தெரிவித்தார். ஊழலற்ற ‘சூப்பர் குட்’ ஆட்சியை அமைப்பதே தனது லட்சியம் எனக் கூறிய அவர், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலமாகவே தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க முடியும் எனத் தனது
உரையில் விளக்கினார்.

“>

தனிநபர் துதிபாடாமல், மக்கள் பணத்தை மக்களுக்கே கொண்டு சேர்க்கும் ஒரு தன்னலமற்ற அரசியலை விஜய் முன்னெடுத்துள்ள விதம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்குப் பெரும் ஆதரவைத் தேடித்தந்துள்ளது