ஒடிசா மாநிலம் திரகுலா கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ‘காளி’ என்ற நாய் தனது உயிரையே தியாகம் செய்துள்ளது.

குழந்தைகள் விளையாடும் இடத்திற்குப் பாம்பு வந்ததை அறிந்த காளி, அந்தப் பாம்புடன் ஆக்ரோஷமாகப் போராடி அதைக் கொன்றுள்ளது.

இருப்பினும், இந்தப் போராட்டத்தின் போது பாம்பினால் பலமுறை கடிக்கப்பட்ட காளி, விஷம் ஏறிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்தது.

30 பிஞ்சுகளின் உயிரைக் காத்து வீரமரணமடைந்த அந்த நாய்க்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.