சீன கடல் பகுதியில் பரந்த அமெரிக்க விமானத்தை சீனா விரட்டி அடித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த பி-8 ரக விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனை கவனித்த சீன விமானப்படை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்ததுள்ளது.

மேலும் அமெரிக்க விமானத்தின் இறுதி ரெக்கை பகுதியை இலக்காக கொண்டு 500 அடி தொலைவில் தனது போர் விமானம் ஒன்றை சீனா தயாராக நிறுத்தியது. இதைத் தொடர்ந்து சீன போர் விமானம் அமெரிக்க விமானத்தை பின் தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி அதை விரட்டி அடித்தது. இதை அடுத்து அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டங்கள் மீறும் செயல் என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.