தன் வீட்டிற்கு ஒரு செல்லப் பிராணியைத் தத்தெடுக்கச் சென்ற ஒரு நபருக்கு, அங்கு ஒரு நெகிழ்ச்சியான ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு பூனைக்குட்டியை மட்டும் தத்தெடுக்க அவர் முயன்றபோது, அந்தச் சிறு உயிர் தனது சகோதரப் பூனையை விட்டுப் பிரிய மறுத்து, அதைக் கட்டியணைத்துக் கொண்டது. எவ்வளவு முயன்றும் அந்த இரண்டு குட்டிப் பூனைகளும் ஒன்றை ஒன்று பிரியாமல் பிடிவாதமாக இருந்த அந்தப் பாசப் போராட்டம், அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
A man went to adopt a cat,but it wouldn't leave its brother, and he ended up having to take bothpic.twitter.com/BQKClGjnDO
— Wolf of X (@tradingMaxiSL) December 29, 2025
இந்தக் குட்டி ஜீவன்களின் பிரிக்க முடியாத பிணைப்பைக் கண்டு நெகிழ்ந்து போன அந்த நபர், ஒரு பூனையை மட்டும் பிரித்து எடுத்துச் செல்ல மனமில்லாமல், இரண்டு பூனைக்குட்டிகளையுமே தத்தெடுத்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்தக் காணொளி, சமூக வலைதளங்களில் வைரலாகி “அன்பிற்கு ஈடாக எதுவுமில்லை” என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
