கூகுள் பே பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Google Pay இப்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை Convenience Fee எனும் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ரூ.100 வரை எந்த கட்டணமும் இல்லை.

ஆனால் ரூ.100 முதல் ரூ.200 வரை ரீசார்ஜ் செய்தால் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும். மற்றபடி நண்பர்களுக்கு அல்லது கடைகளுக்குச் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.