உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில், பிரசவத்தின் போது பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்த விபின் குப்தா தனது கர்ப்பிணி மனைவியை கோல்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சாதாரண பிரசவத்திற்கு ரூ.10 ஆயிரமும், சிசேரியன் பிரசவத்திற்கு ரூ.12 ஆயிரமும் கேட்டு, கட்டணங்களை உயர்த்தியதாக அவர் குற்றம்சாட்டினார். தனது மனைவிக்கு பிரசவ வலி அதிகரித்த நிலையில் கூட, பணம் தரும்வரை சிகிச்சையைத் தொடங்க மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
விபின் குப்தா, “அதிகாலை 2.30 மணிக்கு பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால் அவர்கள் கட்டணங்களை மேலும் உயர்த்தினர். டெலிவரி தொடங்கச் சொல்லியும், பணம் பிறகு தருவதாகக் கூறியும் கேட்டேன். ஆனாலும் அவர்கள் மறுத்து, முதலில் பணம் வேண்டும் என வலியுறுத்தினர்” என்று ANI-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
नवजात की मौत के प्रकरण में जिला प्रशासन ने गोलदार अस्पताल को किया सील। भर्ती मरीजों को जिला महिला अस्पताल शिफ्ट कराया जा रहा है। DM के निर्देश पर ADM एके रस्तोगी सृजन अस्पताल पहुंचे, प्रसूता का हालचाल लिया। बेहतर इलाज के निर्देश दिए। जिला प्रशासन पीड़ित परिवार के साथ।@CMOfficeUP pic.twitter.com/D1HUnq0Tgx
— DM LAKHIMPUR KHERI (@DmKheri) August 22, 2025
“>
இதன் விளைவாக, பிரசவம் தாமதமாகி, புதிதாகப் பிறந்த குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து, தனது மனைவி சாலையில் “தூக்கி எறியப்பட்டதாக” அவர் கடும் குற்றம் சாட்டினார்.
#WATCH | Lakhimpuri Kheri, UP | A man, Vipin Gupta, reached the office of the DM with the dead body of his newborn child, who died during delivery.
He says, “I got my wife admitted here in the hospital. They said a normal delivery would cost Rs 10000 and a c-section delivery… pic.twitter.com/DhgHGOp15g
— ANI (@ANI) August 23, 2025
“>
இந்நிலையில், சம்பவம் குறித்து புகார் பெற்ற மாவட்ட நிர்வாகம், கோல்டர் மருத்துவமனைக்கு சீல் வைத்தது. அங்கு இருந்த நோயாளிகள் மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். டிஎம் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிர்வாகம் துணை நிற்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
