
இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க விரும்புவோர் www.tnonlinegamingauthority.com இணையதளம், [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.