அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சு ராஜ்புத் என்ற இந்தியப் பெண்மணி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக புளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வரும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒருமுறை புளோரிடாவிற்கு வந்துவிட்டால் இங்கிருந்து வேறு எந்த மாகாணத்திற்கும் இடம்பெயரத் தோன்றாது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் புளோரிடாவில் உள்ள அழகிய கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், இயற்கை நீர்சுனைகள் மற்றும் அவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள நவீன வசதிகள் ஆகியவை தங்களை இந்த இடத்தை விட்டுப் பிரிய முடியாதபடி கட்டிப்போட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இதனால் அவர் வசிக்கும் குடியிருப்பின் கிளப்ஹவுஸ் அருகில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நீச்சல் குளம், குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் பகுதிகள், மாலை நேர உலாவுக்கான நடைபாதைகள், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகளை அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மாலை நேரங்களில் சலிப்பு ஏற்படும் போதெல்லாம் தனது நண்பர்கள் மற்றும் குழந்தைகளுடன் அங்கு சென்று நேரத்தைக் கழிப்பதாகக் கூறும் அவர், அங்குள்ள அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல் குடும்பத்துடன் வாழ்வதற்கு மிகவும் ஏற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், புளோரிடாவின் சிறப்பான வாழ்க்கை முறை மற்றும் வெளிப்புறக் கட்டமைப்பு வசதிகள் காரணமாகவே மக்கள் அந்த மாகாணத்தை நேசிக்கிறார்கள் எனப் பல இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
