அமைச்சர் சிவி கணேசன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆய்வு செய்தார் .அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள 12 தொழிற்பயிற்சி மையங்களில் 72 நவீன தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞர்களுக்காக உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐடிஐ படிக்கக்கூடிய அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை முதலில் ஒரு மு க ஸ்டாலின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.