அதிமுக கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 5-ம் தேதி மாலை 5 மணி அளவில் ஊத்துக்குளியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம் வழங்கப்படும்.
அதன் பிறகு 300 பேருக்கு மிக்ஸி, குக்கர், கிரைண்டர், பீரோ, ஃபேன் மற்றும் சில்வர் பாத்திரங்கள் போன்றவைகள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக தான் அதிமுக இப்படி ஒரு நோட்டீசை அடித்து ஒட்டியுள்ளதாக விமர்சிக்கிறார்கள்.
