இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோக்கள் வெளியாகி வருகிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் விலங்குகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். அதிலும் மயில் தன்னுடைய அழகான தோகையை விரித்து ஆடுவதும், முட்டையை பாதுகாப்பதும் என்று பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றில் மயில் ஒன்று நீண்ட தொலைவில் பறந்து சென்றிருக்கிறது. மின்சார கேபிள் போன்ற இடத்தில் அமர்ந்து அது பறக்க ஆரம்பிக்கிறது. மேலும் இது பார்ப்பதற்கே ஒரு அற்புத தருணமாக இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது