லிட்டில் மிஸ் சன்சைன் என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்புத் திறனுக்காக ஆஸ்கார் விருதை வென்ற நடிகர் தான் ஆலன் ஆர்க்கின். இவர் தன்னுடைய 89 ஆவது வயதில் காலமானார். இவர் 2006 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதான லிட்டில் மிஸ் சன்ஷைன் என்ற படத்தின் மூலம் பெற்றுள்ளார்.

அது மட்டும் அல்லாமல் 1963ஆம் ஆண்டு என்டர் லாபிங் என்ற படத்திற்காக டோனி விருதை வென்றார். இதனை தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு லிட்டில் மர்டர்ஸ் திரைப்படத்தை இயக்கியதற்காக டிராமா டெஸ்க் விருதை இவர் பெற்றுள்ளார். இவர் என் மறைவுக்கு தற்போது திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.