ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் தொடர்பான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்று முதல் புதியதாக ஊதா நிறத்தில் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பால் பாக்கெட்டின் விலை அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.