தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.