தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த/வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 19 முதல் 26 வரை துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணைகளையும், தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களையும் https://www.dge tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.