1. நேபாளத்தில் அலைமோதும் Gen-Z புரட்சி!
நேபாளத்தில் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Gen-Z இளைஞர்கள் எழுப்பிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ள சூழலில், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இதன் பின்னணியில் அரசியல் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
மக்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், பாராளுமன்றம், உச்சநீதிமன்றம், பல அமைச்சர்களின் வீடுகள், குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடல் இல்லம் வரை போராளிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் பரவியுள்ள இந்த அதிரடியான கட்டமைப்புகளுக்கிடையே, ஏற்கனவே 5 அமைச்சர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, நாடு முழுவதும் தேர்தல் நடத்த வேண்டும் என பல தரப்பிலிருந்து வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
2. ஆஃப்கானிஸ்தானில் தகர்ந்த ஜனநாயகம்!
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கப் படைகள் விலகியதையடுத்து ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம் கட்டுப்பாட்டை பெற்றது. தலைநகர் கபூலை கைப்பற்றிய தாலிபான்கள், அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியை நாடு விட்டு தப்பிச் செல்லும்படியான சூழலை உருவாக்கினர்.

மக்கள் பாதுகாப்பிற்காக ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த பரபரப்பில் 170 பேர் உயிரிழந்தது சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் மாற்றத்திற்கு பின்னர், பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் அந்நியர்களுக்கான உரிமைகள் என அனைத்தும் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி முற்றிலும் தீவிரவாத சூழலில் மாறியுள்ளது.
தற்போது ஆஃப்கானிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன், சர்வதேச ஆதரவு இன்றி தடுமாறி வருகிறது.
3. இலங்கையில் கலங்கிய பொருளாதாரம், மக்கள் போராட்டம் !
4. பங்களாதேஷ்: மாணவர்களால் நிலை புரண்டது!
5. மியான்மர்: இராணுவ அடக்குமுறையில் அழிந்த ஜனநாயகம்!


