நேபாள அரசியல் பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ராஜினாமாவுக்கு பின்னதாக, குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமூக ஊடகத் தடை, ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதார சிக்கல்கள் ஆகியவைகளால் நிலைமை மோசமடைந்த நிலையில், நாடெங்கும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்ததும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததும், இந்த அரசியல் மாற்றம் தற்போதைய சூழலில், நேபாளம் புதிய தலைமையினை எதிர்நோக்கி நகர்கின்றது.
