சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஆலோசனையை பெற்ற பிறகு குடியரசு தலைவர் தான் ஒப்புதல் தர வேண்டும்.

அதற்கான அதிகாரம் அவருக்கு தான் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவருக்கு போஸ்ட்மேன் வேலை தான். நாம் அனுப்புவதை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் வெளிப்படையாக கூறியுள்ளார். இதையெல்லாம் கண்டித்து தான் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.