கேரள மாநிலத்தில் அரசு சார்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் பெரிய தொகையாக பம்பர் பரிசு விற்பனையும் நடைபெற்று வருகிறது. லாட்டரி சீட்டு வாங்க தமிழகத்திலிருந்து பலரும் கேரளா சென்று வருகிறார்கள். கேரளாவில் 2023 ஆம் வருடத்திற்கான மான்சூன் பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 27 லட்சம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ஒரு டிக்கெட் 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பம்பர் சீட்டு குலுக்கலில் 10 கோடி ரூபாய் விழுந்தது.
இந்த லாட்டரி சீட்டை வாங்கியது யார் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அந்த லாட்டரி சீட்டை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியுள்ளனர். அதாவது 11 பேர் சேர்ந்து 250 ரூபாய் மதிப்புள்ள அந்த லாட்டரி சீட்டை ஷேர் செய்து வாங்கி உள்ளார்கள். அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்த ஒரு நொடியில் அவர்களுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. பத்து கோடி ரூபாய் லாட்டரி விழுந்து துப்புரவு பணியாளர்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
