இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் ரயில்களில் ஏதாவது மாற்றம் இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக முன்னரே அறிவிக்கப்படுகிறது. தற்போது ரயில்களுக்கான புதிய நேரத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 22640 ஆலப்புழா மற்றும் சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் புதிய நேரம் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலப்புழா -சென்னை அதிவிரைவு விரைவு, ஆலப்புழா (15.20), சேர்த்தலா (15.39), துறவூர் (15.50), எர்ணாகுளம் சந்திப்பு (16.50), எர்ணாகுளம் டவுன் (17.03), ஆலுவா (17.26), திருச்சூர் (18.28), வடகஞ்சேரி 18.53 (19.17), பாலக்காடு (19.47), போத்தனூர் (21.13), கோயம்புத்தூர் (21.27), திருப்பூர் (22.13), ஈரோடு (20.13). ), சேலம் (00.02), ஜோலார்பேட்டை (1.48), அரக்கோணம் (3.48), ஆவடி (4.28), பெரம்பூர் (4.43), சென்னை சென்ட்ரல் (5.15).