
தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 2265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பெங்களூரு மற்றும் திருப்பூர் போன்ற பிற முக்கிய நகரங்களில் இருந்து தமிழக முழுவதும் 1700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது