தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானுக்கான தூதரை சீனா நியமித்தது. ஆப்கானிஸ்தானுக்கான புதிய சீன தூதர் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தூதரை நியமிக்கும் முதல் நாடு சீனாவாகும். உலகில் எந்த நாடும் தலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத நேரத்தில் சீனாவின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து தலிபான் ஆட்சியின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சீன தூதர் ஜாவோ ஜிங்கின் நற்சான்றிதழ்களை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் பிரதமர் முகமது ஹசன் அகுண்ட் ஏற்றுக்கொண்டார். தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஆகஸ்ட் 2021 இல் தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட முதல் தூதராக சீனா இருப்பார் என்பதை உறுதிப்படுத்தினார்.