மைதானத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளின் போது, கேமராமேன்கள் அவ்வப்போது ரசிகர்களைத் திரையில் காட்டுவது வழக்கம். அவ்வாறு ஜாலியாக மேட்ச் பார்க்க வந்த நபர் ஒருவர், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.

மேலும் அவர் தனது அலுவலகத் தோழியுடன் ரகசியமாக மேட்ச் பார்க்க வந்திருந்த நிலையில், மைதானத்தில் இருந்த பெரிய திரையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பது நேரலையாகக் காட்டப்பட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத அந்த நபர், கேமராவைப் பார்த்தவுடன் அதிர்ச்சியில் தனது முகத்தை மறைக்க முயன்றது வேடிக்கையாகவும் அதேசமயம் அவருக்குச் சங்கடமாகவும் முடிந்தது.

“>

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். “வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்திருப்பாரோ?” என்றும், “அடுத்த நாள் அலுவலகத்தில் என்ன நடக்குமோ?” என்றும் கிண்டலாகக் கேட்டு வருகின்றனர்.

ஒரு சில நொடிகள் திரையில் தோன்றிய அந்த காட்சி, அந்த இளைஞரின் தனிப்பட்ட ரகசியத்தை உலகம் முழுவதற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில், பொது இடங்களில் எங்கு சென்றாலும் கேமராவின் கண்களில் இருந்து தப்பிப்பது கடினம் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சிறந்த உதாரணம்.