பஞ்சாப் மாநிலத்தில் தேவி பிரசாத் என்ற கல்வித் துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை யூடியூபில் வெளியிட்டார். இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உயரதிகாரிகள் கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த விவகாரம் குறித்து தேவி பிரசாத் கூறியதாவது, வீடியோ எடுக்கப்பட்ட நாளில் எனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள். இதனால் எனது மனைவி அலுவலகத்திற்கு வந்தார். அந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என தேவி பிரசாத் கூறியுள்ளார்.