பீகார் மாநிலம் பாட்னாவில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சான்றிதழ் எண் BRCCO/2025/15933581 வார்டில் 15 மாஹாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் அந்த பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார் என்றும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழில் நாய் புகைப்படம் இருந்தது.

பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும், தாய் குடியாதேவி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது இன்று அந்த இருப்பிட சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் Catty Boss, Cat Kumar, Cattiya Devi Q என்ன குறிப்பிட்டு பூனைக்கு இருப்பிட சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பம் வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் உதிதா சிங் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே சோனாலிகா டிராக்டர், டொனால்ட் ட்ரம்ப் பெயர்களுக்கு பீகாரில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.