தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், விஜயலட்சுமிக்கு நான் ஆதரவு தெரிவித்த நாளிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எனக்கு வாட்ஸ் அப்பில் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளனர். இந்த ஆபாச வீடியோக்கள் பொதுமக்கள் வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பெண்ணுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.