
ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை விளக்கி வைக்க பிரிட்டன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முக அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எடுத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.