செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், சென்னையில் கடுமையான மழை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.  மிகப் பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது….   இதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சர்,   அமைச்சர் பெருமக்களின் முழு கவனமும் இன்றைக்கு எதில் இருக்கிறது என்றால் ? சென்னையில் கார் ரேஸ் நடத்துவதில் இருக்கிறது.

இந்த கார் ரேஸ் எங்கு நடத்துகிறார்கள் ? சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை பக்கத்திலே செல்லுகின்ற அந்த ரோடிலும்….  மவுண்ட் ரோடு, பாதுகாப்பு துறை ரோடு வழியாக சென்று…  துறைமுகம் செல்கின்ற வழியாக…..  இந்திய ராணுவத்திற்காக உயர்நீத்த வீரர்களின் நினைவுத்தூண் வைத்திருக்கின்ற இடத்தை  சுற்றி,  இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. அதற்காக மொத்த செலவினம் 242 கோடி ரூபாய். யார் வீட்டு பணம் ? உங்க அப்பா வீட்டுக்கு பணமா ?

ஒவ்வொரு சாதாரண கூலித் தொழிலாளிகள் கொடுக்கின்ற… அரசினுடைய வரிப்பணம்…. நம்முடைய பணத்தை எடுத்து,  இதிலே 242 கோடி ரூபாய்க்கு இந்த அரசு…. திமுக அரசு…. முதலமைச்சர், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின்…. உதயநிதி ஸ்டாலின் என்று சொல்வதை விட  இந்த நாட்டினுடைய இளவரசர். பட்டத்து  இளவரசரை மகிழ்விப்பதற்காக…. அவரை உற்சாகப்படுத்துவதற்காக…. அவரை குஷிப்படுத்துவதற்காக…. இன்றைக்கு அரசினுடைய பணத்தை 242 கோடி ரூபாயிலே இன்றைக்கு கார் பந்தயம் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.