கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இதனை  நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்  51 வயதாகும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ரா 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பரேலி தொகுதியில் 2017 முதல் 2022 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜேஷ் மிஷ்ரா. 10 ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பை முடித்த மிஷ்ரா, படிப்பின்மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது 12ஆம் வகுப்பையும் முடித்திருக்கிறார். இனி சட்டம் படித்து ஏழைகளுக்கு உதவ அவர் முடிவு செய்திருக்கிறார்.