மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் கூடுதல் கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியானவர்களா என்று வழக்கு தொடரப்பட்டது. அதாவது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் security printing and minting corporation of India நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் கூடுதல் கொடுப்பனவு பெற தகுதியானவர்கள் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு ஊழியர்கள் தனி அந்தஸ்து பெற்றவர்கள் என்பதால் தொழிற்சாலைகள் சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு சலுகை வழங்கப்பட மாட்டாது என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர். மேலும் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் போன்று இல்லாமல் அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் அரசின் தேவைக்கு ஏற்ப பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.