தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் 2, 3, 4 மற்றும் 5 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்து மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். தபால் அலுவலகம் MIS, கால்குலேட்டரின் அடிப்படையில் 2 லட்சம் ரூபாயை இத்திட்டத்தில் டெபாசிட் செய்தால் 5 வருடங்களில் ரூ. 73,980 வட்டி கிடைக்கும். இவற்றை 60 மாதங்களாக பிரித்தால் மாதந்தோறும் ரூ. 1,223 பெறப்படும். அதன்படி, ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,233 கிடைக்கும்.

இந்த திட்டத்தில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடங்களில் மொத்தம் ரூ.1,11,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும். அந்த வகையில் ரூ.3 லட்சம் வரை டெபாசிட் செய்தபின் மாதந்தோறும் ரூ.1,850 வருமானமாக பெறலாம். இதேபோன்று இக்கணக்கில் ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால் 7.4% என்ற விகிதத்தில் மொத்தம் ரூ.1, 48,020 வட்டியாக கிடைக்கும். இதன் வாயிலாக மாதந்தோறும் ரூ. 2,467 வட்டியாக தபால் நிலையத்தில் பெறலாம். 5 லட்சத்தை முதலீடு செய்தால், 7.4% என்ற விகிதத்தில் 5 வருடங்களில் மொத்தம் ரூ.1,84,980 வட்டியாக பெறப்படும். இதில் மாதந்தோறும் ரூ.3,083 வட்டியை பெறலாம்.