புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் தலைமை வகித்த நிலையில் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவி தொகை கிடைக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் புதிதாக வாங்கத் தேவையில்லை பழைய நகல்களைக் கொண்ட விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசு மூன்று கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அதை சரியாக பயன்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வருடத்திற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.