பான் கார்டு என்பது வங்கிகளில் கணக்கு திறக்கவும், கடன் வாங்க, விண்ணப்பிக்கவும் வருமானவரி தாக்கல் செய்யவும் ஒரு முக்கியமான ஆவணமாகும். அதுமட்டுமின்றி பான் கார்டு ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது. இதனால் அதில் உள்ள விவரங்களில் எந்த பிழையும் இருக்கக்கூடாது. ஒருவேளை பிழை இருந்தால் அதை ஆன்லைன் மூலமாக மாற்றிவிடலாம். அதற்கு முதலில் www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html  என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் “Application Type” -> “Changes or Correction in Existing PAN card”  என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுது டோக்கன் நம்பர் கொடுக்கப்படும். அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த டோக்கன் நம்பரை மெயிலில் அனுப்ப வேண்டும். திருத்தம் செய்ய வேண்டிய விவரங்களை பதிவிட்ட பிறகு அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து போன்றவற்றை கொடுக்க வேண்டும். அனைத்தும் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு 110 கட்டணம் செலுத்த வேண்டும் . அதன் பிறகு விண்ணப்பித்தவரின் முகவரிக்கு அப்டேட் செய்யப்பட்ட பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.