நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் ஹால்மார்க் கட்டாய முத்திரை பெற்றிருக்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் அமல்படுத்தப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.

இதுவரை 343 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் அமலில் இருந்து வரும் நிலையில் தற்போது நாட்டின் 16 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்டமாக 55 மாவட்டங்களில் தங்க நகைகள் மற்றும் கலைப் பொருள்களின் கட்டாய ஹால்மார்க் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.