
பிரதான் மந்திரி லோன் யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்டு உள்ள அனைவருக்கும் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போனார் தவறான தகவலை நம்பி மக்கள் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் PIBFactCheck இதற்கு பதிலளித்துள்ளது.
அதாவது இந்த தகவல் பொய்யானது என்றும், அரசால் செயல்படுத்தவில்லை என்றும் PIBFactCheck தெளிவுபடுத்தியுள்ளது. முழு விவரம் தெரியாமல் ஆதார் எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.