நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

அதற்காக குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நுகர்வோர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தவில்லை. இதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்களை சந்திக்க கூடும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு ஜனவரி 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 50 லட்சம் பேர் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்காமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.