ஆதார் அட்டை என்பது ஒரு இந்திய குடிமகனின் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகும். இது 12 இலக்க எண்களை கொண்டுள்ளது. தற்போது ஆதார் கார்டு அரசின் அனைத்து சலுகைகளையும், மானியங்களையும் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய அட்டையாகும். ஆதார் அட்டை மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுவதால் அதனை எந்த பிழையும் இன்றி புதுப்பித்து வைப்பது அவசியமாகும்.

இந்த ஆதார் கார்டை புதுப்பிக்க UIDAI வழங்கிய சேவைகளை பயன்படுத்த வேண்டும். UIDAI தற்போது ஒரு ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் அட்டைகள் இணைக்க முடியும் என்பதை தெளிவாக கூறியுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரின் மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்தி ஆதார் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு நிரந்தர மொபைல் என்னுடன் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆதார் கார்டை பெற முடியும் என UIDAI தற்போது தெளிவுபடுத்தி உள்ளது.